டாஸ்மாக் அமைக்க எதிர்ப்பு.. கோட்டைப்பட்டிணம் பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றம்..!!!புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, கோட்டைப்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை (ECR) சாலையில் அரசு மதுபான கடை (சாராயக்கடை) திறக்க உள்ளதாக தகவல் வந்ததையடுத்து
அக்கடையை அனைத்து இயக்கங்களும், கட்சிகளும் மற்றும் அனைத்து சமுதாய பொதுமக்களும் சேர்ந்து மதுபான கடையை திறக்க கூடாது என 31/08/2019 சனிக்கிழமை அன்று கோட்டைப்பட்டினம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது:-

  1. அரசு மதுபானக்கடை (சாராயக்கடை) திறக்க முயற்சி செய்தால் அனைத்து சமுதாய மக்களையும் ஒன்று திரட்டி சாலை மறியல் செய்வதாக முடிவு செய்யப்பட்டது.
  2. அரசு மதுபான கடையை (சாராயக்கடை) அத்துமீறி திறந்தால் அந்த கடையை அனைத்து சமுதாய மக்களையும் ஒன்று திரட்டி இழுத்து மூடி பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  3. இந்த ECR சாலையில் ஏற்கனவே மதுபான மோகத்தால் பல விபத்துக்கள் நடந்து கொண்டு இருக்கிறது.

கடந்த 25/08/2019 அன்று இரவு  நடந்த பயங்கர கோர விபத்தில் ஒரு குடும்பம் 7 பிஞ்சு குழந்தைகளுடன் அனாதையாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

எனவே குடி குடியை கெடுக்கும்.. மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்பதற்கிணங்க கோட்டைப்பட்டினம் பகுதியில் மது கடை திறப்பதை கைவிட வேண்டும் என தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுகின்றோம் என தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு.
அனைத்து இயக்கங்கள், கட்சிகள், மற்றும் அனைத்து சமுதாய பொதுமக்கள் கோட்டைப்பட்டினம்.
மணமேல்குடி ஒன்றியம்
புதுக்கோட்டை மாவட்டம்

தொடர்புக்கு:
 83443 87505, 73393 03513,  90808 92677

தகவல் : கோட்டைப்பட்டினம் MSM சதாம் உசேன்

Post a comment

0 Comments