புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது:
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 2020 ஆம் ஆண்டுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி செப். 1 முதல் தொடங்கப்படுகிறது. பொதுமக்கள் வாக்காளர் பட்டியலைப் பார்வையிட்டு தங்களது பெயர், புகைப்படம் ஆகியவை தவறின்றி உள்ளதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
திருத்தம் மேற்கொள்ள படிவம் 8 போன்றவற்றை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் வாக்குச்சாடி நிலை அலுவலர்களுக்கென பிரத்யேக
செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களுடைய கடவுச்சீட்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், குடும்பஅட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அளித்து விண்ணப்பம் செய்து கொள்ளலாம். புதிய வாக்காளர்கள் படிவம் 6 அளிக்க வேண்டும். நீக்கம் செய்ய படிவம் 7 அளிக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் அக். 15ஆம் தேதி வெளியிடப்படும்.
அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம், அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் இலுப்பூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
அக். 15 முதல் 30 வரை வாக்குச்சாவடி மைய அலுவலர்களிடம் அலுவலக நாட்களில் வேலை நேரம் முடிந்த பின்பு ஒரு மணிநேரமும், நவம்பர் 2, 3, 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பம் அளிக்கலாம்.
மேலும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், புதுக்கோட்டை சார் ஆட்சியர் மற்றும் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை படிவங்கள் அளிக்கலாம்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.