புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரகத் தூய்மை கணக்கெடுப்பில் பங்கேற்க அழைப்புமத்திய நீர்வள அமைச்சகம், குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை ஆகியவற்றின் சார்பில் நடத்தப்படும் ஊரக தூய்மைக் கணக்கெடுப்பில் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம், குடிநீர் மற்றும் சுகாதார துறையின் கீழ், மாவட்டத்தில் உள்ள ஊரகப்பகுதிகளில் சுகாதார நிலைப்பாடு குறித்து, மதிப்பீடு செய்வதற்கான 'தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் 2019' (Swachh Survekshan Grameen 2019) கணக்கெடுப்பு பணி 14.08.2019 முதல் 15.09.2019 வரை நடைபெற்று வருகிறது.

எனவே பொதுமக்கள் அனைவரும் தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் 2019 கணக்கெடுப்பில் பங்குபெறும் வகையில் மத்திய அரசின் மூலம் SSG2019 என்ற Mobile App ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நமது புதுக்கோட்டை மாவட்டத்தின் சுகாதார நிலை குறித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், யுனெசழனை Android Mobile இல்லாதவர்கள் இலவச தொலைபேசி எண்ணில் 18005720112 தொடர்பு கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், உள்ள அனைவரும் இதில் பங்கேற்று தங்கள் மொபைலில் உள்ள Playstore மூலம் கீழ்க்கண்ட வழிமுறைகளில் உங்களது கைபேசியில் Playstore செல்லவும், SSG2019 என்று டைப் செய்யவும், SSG2019 என்ற Mobile App -யை download செய்யவும், State tamilnadu-யை தேர்வு செய்யவும், district புதுக்கோட்டை யை தேர்வு செய்யவும், language tamil/English மொழியை தேர்வு செய்யவும் இறுதியாக தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த 4 கேள்விகளுக்கு பதில் அளித்து உங்களுடைய கருத்தை பதிவு செய்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி. இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments