தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காரைக்குடி-சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத் தலைவர் என். ஜெயராமன், செயலாளர் வ. விவேகானந்தம் ஆகியோர் சென்னை ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக சென்னைக்கும், அதேபோல இதே வழித்தடத்தில் சென்னை-காரைக்குடிக்கும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.
அடுத்து, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் நடைபெறும் தைப்பூச விழாவிற்கு, கடந்த பல ஆண்டுகளாக பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து மேல்மருவத்தூருக்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆண்டுதோறும் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம்.
இதற்காக, மீட்டர்கேஜ் பாதையாக இருந்த காலத்திலேயே பட்டுக்கோட்டை-மேல்மருவத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
அதேபோல, தற்போதும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகலப் பாதையில் பட்டுக்கோட்டை-மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர்- பட்டுக்கோட்டை ஆகிய இரு முனைகளில் இருந்தும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்களுக்காக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.