திருச்சி விமான நிலையத்தில் புதிய நுழைவுவாயில் அமைக்கும் பணி தீவிரம்



திருச்சி விமான நிலையத்தில் புதிய நுழைவுவாயில் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருச்சி விமான நிலையத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான நிலையத்தில் வாகனங்கள் உள்ளே நுழையும் வாயில் பகுதியானது மாற்றியமைக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் உள்ளே நுழைவதற்கு வசதியாக பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.

 இதேபோல் புதிய விமான முனையம் கட்டும் பணியானது மிக விரைவாக நடைபெற்று வருகிறது. இதற்கு பயன்படும் வகையில் தற்போது வாகனங்கள் வெளியில் வந்து கொண்டிருக்கும் பாதையானது, புதிய முனையம் அமைக்கும் பணிக்கான வாகனங்கள் சென்று வருவதற்கு ஒதுக்கப்பட இருக்கிறது.

 இதனால் வாகனங்கள் வெளியேறும் வாயிலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டு, புதிய வெளியேறும் பகுதியானது உருவாக்கப்பட்டு வருகிறது.

 புதிய நுழைவுவாயில் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தப் பாதையானது பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

 இதனால் விமான நிலைய வளாகத்தில் இருந்து வெளியேறும் வாகனங்கள் புதிய பாதையின் வழியாக வெளியேறும் எனவும், பழைய நுழைவுவாயிலின் வழியாக புதிய முனையம் அமைக்கும் பணிக்கான வாகனங்கள் சென்றுவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments