அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதை கட்டாய பாடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்.



அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு
பகவத் கீதையை கட்டாய பாடமாக்கியுள்ளதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்.

மதச்சார்பற்ற இந்தியாவில் கல்வியை காவி மயமாக்க வேண்டும் என்ற திட்டத்தில் மத்திய அரசு செயல் பட்டு வருகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு யோகா,சூரிய நமஸ்காரம், சமஸ்கிருத திணிப்பு கொண்டு வந்த மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இப்போது பகவத் கீதையை பாடமாக்கி இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் செயல் மத்திய அரசின் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் உள்ளது.

பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதை பாடம் அவசியம் இல்லாத போது அதை சேர்க்க வேண்டிய அவசியம் என்ன?

இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிராக  பொறியியல் கல்வி படிக்கும் மாணவர்கள் பாடத்தில் பகவத் கீதையை புகுத்திய அண்ணா பல்கலைக்கழகத்தின் செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக அரசு இதில் தலையிட்டு உடனே  தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.

ஊடக தொடர்புக்கு: 9789030302

இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments