டெங்கு காய்ச்சலும் உணவு வகைகளும்1. டெங்கு என்றால் என்ன?
'ஏடிஸ் எஜிப்டி' (Aedes Aegypti) எனும் பெண் கொசுவால் பரவும் வைரஸ் தொற்று.

2. டெங்குவின் அறிகுறிகள்?
கடுமையான காய்ச்சல், வயிற்று வலி, தாங்க முடியாத அளவு தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, தொடர்ச்சியான வாந்தி, களைப்பு ஆகியவை டெங்குவின் அறிகுறிகள். தொற்றின் தீவிர நிலையில் தட்டணுக்கள் குறைவதால், உடலில் அரிப்பு ஏற்படும், சிவப்புப் புள்ளிகள் தோன்றும்.

3. ஒரு முறை வந்தவருக்கு மீண்டும் டெங்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதா?
ரத்தத்தில் டெங்கு ஐ.ஜி.எம்., மற்றும் ஐ.ஜி.ஜி., எதிர் அணுக்கள் (Antibodies) இருக்கின்றனவா என பரிசோதனையில் அறியலாம். நோயாளிக்கு டெங்கு பாதிப்பு முதல் முறையாக இருந்தால், ஐ.ஜி.எம்., அளவு அதிகமாகவும், ஐ.ஜி.ஜி., அளவு குறைவாகவும் இருக்கும். டெங்கு பாதிப்பு மீண்டும் இருந்தால், ஐ.ஜி.எம்., அளவு குறைவாகவும், ஐ.ஜி.ஜி., அளவு அதிகமாகவும் இருக்கும்.

உணவு வகைகள் :
ஆரஞ்சு
ஆரஞ்சுப் பழத்தில் நிறைய வைட்டமின்களும், இதர சத்துக்களும் காணப்படுகின்றன. செரிமானத்திற்கும், நன்றாக சிறுநீர் போவதற்கும் ஆரஞ்சு உதவுவதால் டெங்கு காய்ச்சலிலிருந்து விரைவில் விடுபட முடியும்.

பப்பாளி
கனிகளைக் கொடுத்த பப்பாளி மரத்தின் இலைகள் டெங்கு காய்ச்சலுக்கு சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு 2 பப்பாளி இலைகளை நன்றாக நசுக்கிப் பிழிந்து சாறெடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையிலும் இரவிலும் இந்தச் சாற்றை 2 ஸ்பூன் குடித்து வந்தால் டெங்கு காய்ச்சல் விரைவில் ஓடிப் போகும்.

கஞ்சி
டெங்கு காய்ச்சலால் உயிருக்கே போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு கஞ்சி தான் மிகமிகச் சிறந்த உணவாகும். கஞ்சி குடிப்பதால் உடலுக்கு நிறைய சக்தி கிடைக்கும். அதைக் குடிப்பதும் மிகவும் எளிது.

மூலிகை டீ
டெங்கு காய்ச்சலைக் குறைப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது மூலிகை டீ. அதிலுல், இஞ்சி டீ அல்லது ஏலக்காய் டீ குடிப்பது மிகவும் நல்லது.

இளநீர்
இளநீரை நிறையக் குடிப்பதாலும் டெங்கு காய்ச்சல் விரைவில் குணமாகும். கனிமச்சத்துக்கள், எலெக்ட்ரோலைட்டுகள் உள்ளிட்ட நீர்ச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.

காய்கறி ஜூஸ்
கேரட், வெள்ளரி உள்ளிட்ட பசுமை நிறைந்த காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சுத்தமான ஜூஸ்களைக் குடிப்பதால் டெங்கு காய்ச்சல் குணமாகும்.

பழச்சாறு
நிறையப் பழச்சாறுகளைக் குடிப்பதாலும் டெங்கு காய்ச்சலிலிருந்து தப்பிக்கலாம். அதிலும் வைட்டமின் சி அதிகமுள்ள ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, கிவி, பப்பாளி உள்ளிட்ட பழங்களின் சாற்றைக் குடிக்கலாம். இதனால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகமாகிறது.

புரோட்டீன் உணவுகள்
புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை உண்பதாலும் டெங்கு காய்ச்சலை விரட்டலாம். பால், முட்டை, மீன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடுவது நலம்.

சூப்புகள்
பல வகையான சூப்புகளைச் சாப்பிடுவது டெங்கு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடம்பிற்குத் தெம்பு கிடைக்கவும், எலும்புகள் வலுப் பெறவும் சூப்புகள் உதவுகின்றன. அவை பசியைப் போக்குவதோடு, நாவிற்குச் சுவையையும் தருகின்றன.

எலுமிச்சைச் சாறு
சிட்ரிக் அமிலம் நிறைந்து இருப்பதால், எலுமிச்சையும் டெங்கு காய்ச்சலை விரட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தேவையில்லாத விஷத்தை முறிக்கும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு. ஆரஞ்சுப் பழத்தைப் போலவே, எலுமிச்சையும் செரிமானத்திற்கும் நிறைய சிறுநீர் வெளியேறுவதற்கும் உதவுகிறது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments