தீபாவளி முதல் திருச்சி - பெங்களூரு மாலை நேர விமான சேவைதீபாவளி முதல் அதாவது அக்டோபர் 27.10.2019 முதல் திருச்சி - பெங்களூரு மாலை நேர விமான சேவையை இண்டிகோ நிறுவனம் துவக்க உள்ளது.
திருச்சி மற்றும் பெங்களூருவுக்கு இடையில் தினசரி இண்டிகோ விமான நிறுவனமானது காலை நேர சேவையை வழங்கி வருகின்றது.

ஓடுதள பராமரிப்பு உள்ளிட்ட சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த சேவையானது தற்காலிகமாக வரும் அக்டோபர் 27ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

எப்போதும் நிரம்பி வழியும் இந்த சேவையானது திடீரென நிறுத்தப்படவுள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

பத்திரிக்கைகள், ஊடகங்கள், சமூகவலைத்தளங்கள் வாயிலாக மீண்டும் இந்த சேவையை இயக்கவேண்டி கோரிக்கை விடப்பட்டது. இவற்றிற்கு செவிசாய்த்த இண்டிகோ விமான நிறுவனம் தற்போது மாலை நேர சேவையாக தொடரவுள்ளது.

வரும் அக்டோபர் 27.10.2019 முதல் தினசரி மாலை 17.30க்கு புறப்படும் இண்டிகோ 6E7738 விமானமானது இரவு 18.50க்கு திருச்சி வந்தடையும். 

அதேபோல் திரும்பு வழித்தடத்தில் தினசரி திருச்சியில் இரவு 19.30க்கு புறப்படும் இண்டிகோ 6E7739 விமானமானது பெங்களூருவை இரவு 20.50க்கு சென்றடையும்.

இவ்வழித்தடத்தில் 74 இருக்கைகள் கொண்ட ATR 72-600 வகை விமானம் பயன்படுத்தப்படுகிறது.

Post a Comment

0 Comments