புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவில் அமைந்துள்ள சேமன்கோட்டையில் இருந்து தீயத்தூர் செல்லும் சாலை முறையாக பராமரிக்கப்படாததால், குண்டும்-குழியுமாக மாறியுள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டம் கிழக்கு கடற்கரை பகுதியான சேமங்கோட்டையில் இருந்து தீயத்தூருக்கு செல்லும் தார் சாலை உள்ளது. இந்த சாலையில் பொன்னமங்களம், ஒய்யானேந்தல், தளவரை, பாதிரக்குடி உள்ளிட்ட ஊர்கள் உள்ளன.
பாதிரிக்குடியில் உள்ள பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தீயத்தூரில் இருந்து சேமன்கோட்டை செல்லும் சாலையிலேயே 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், மாணவ, மாணவிகளும் சென்று வர வேண்டி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. சாலை போடப்பட்டு 10 ஆண்டுகள் ஆன நிலையில் சாலையை முறையாக பராமரிக்காத காரணத்தால், தற்போது சாலை குண்டும்-குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவியர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, சேமன்கோட்டை-தீயத்தூர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் புவியரசன் கூறியது:
தீயத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக வெளியூர்களுக்கு செல்பவர்களும் மீன்பிடி தொழில் சார்ந்தவர்களும், மாணவ, மாணவியரும் செல்லக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக தீயத்தூர்-சேமன்கோட்டை சாலை உள்ளது. இந்த சாலை முறையாக பராமரிக்கப்படாததால், தற்போது குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால் இந்த சாலை வழியாக செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் கூறியும் இன்னும் சீரமைக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.