மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் கூடவே டெங்கு காய்ச்சலும் தமிழகத்தில் பரவத் தொடங்கியுள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக டெங்கு காய்ச்சல் தமிழகத்தை உலுக்கிவருகிறது.
நன்றாக ஓடி ஆடி விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் காய்ச்சல் கண்டு சில நாள்களில் உயிரிழப்பது பெற்றோர்களுக்கு பேரிடியாக உள்ளது. சென்னையில் மட்டும் கடந்த இரு நாள்களில் டெங்கு காய்ச்சலால் இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
சென்னையை அடுத்த மதுரவாயலைச் சேர்ந்த லோஹித் என்ற 8 மாத ஆண் குழந்தை, காய்ச்சல் காரணமாக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. சிறுநீரகம், கல்லீரல் செயலிழப்பு மற்றும் மூளையில் ரத்தக் கசிவு ஆகியவற்றால் அக்குழந்தை பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இதற்கிடையே, டெங்கு காய்ச்சல் பாதிப்பும் குழந்தைக்கு இருந்தது. இந்தச் சூழலில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு அக்குழந்தை இறந்தது.
சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் - கவிதா தம்பதியரின் மகள் மகாலட்சுமி என்ற 6 வயது குழந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்க அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இருப்பினும் குழந்தை குணமாகாததால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தைக்கு டெங்கு இருப்பது உறுதியானநிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இருப்பினும் (செப்டம்பர் 23) சிகிச்சை பலனின்றி சிறுமி மகாலட்சுமி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து சிறுமியின் தம்பியான 2 வயது தினேஷுக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பதால் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. ஒரு குழந்தையை பறிகொடுத்துவிட்டு மற்றொரு குழந்தையை காக்க போராடிவரும் தாய் கவிதா, “எங்கள் பகுதிக்கு யாரும் வந்து எந்த சோதனையும் நடத்தலையே. அப்படி நடத்திருந்தா இன்னைக்கு என் பிள்ளை உயிருடன் இருந்துருக்குமே.. கொசு கடிச்சு போகுற உசுரா அது” என அழுது புலம்புகிறார்
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரிடம் டெங்கு காய்ச்சலால் நிகழ்ந்துள்ள உயிரிழப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த அவர், “எழும்பூரில் டெங்கு காய்ச்சலால் இறந்த குழந்தை குறித்து ஆய்வு செய்யப்படும்” என்றார்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.