பட்டாசுகள் விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க காலநீடிப்பு..



தீபாவளி திருநாளன்று பட்டாசுகள் விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெற்றிட இணைய வழியாக விண்ணப்பம் செய்திட கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி கூறியதாவது:

தீபாவளி திருநாளன்று பட்டாசுகள் விற்பனை செய்திட பண்டிகைக்கு 30 நாட்களுக்கு முன் தற்காலிக உரிமம் வழங்கிட விண்ணப்பங்கள் இணையவழி மூலமாக கடந்த மாதம் 31ம் தேதி வரை பெறப்பட்டது.

தற்போது பட்டாசு விற்பனை செய்திட விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், மாவட்டங்களில் இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் இப்புதிய நடைமுறை தங்களுக்கு மேற்கண்ட காலவரையரைக்குள் தெரிய வரவில்லை என்றும், இணைவழி மூலம் விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 இணைய வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நடைமுறையை சரிவர அறிய இயலாத காரணத்தினால் தற்காலிக உரிமத்திற்கு விண்ணப்பம் செய்ய இயலாத வணிகர்கள், விற்பனையாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் நலன் கருதி, இணைய வழியாக விண்ணப்பம் செய்ய வரும் 28ம்தேதி வரை கால நீடிப்பு செய்யப்படுகிறது. இக்கால நீடிப்பினை வணிகர்கள், விற்பனையாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments