போக்குவரத்து விதிமீறலின்போது யாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்புஎஸ்.ஐக்கு நிகரான போக்குவரத்து அதிகாரிகளே வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், அதற்கான அபராத கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டது. அபராதம் விதிப்பது அரசின் நோக்கமல்ல எனவும் போக்குவரத்து விதிமீறல் என்பதே இல்லை என்ற நிலை வரவேண்டும் என்பதற்காகவே அபராதம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி யாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், எஸ்.ஐக்கு நிகரான போக்குவரத்து காவல் அதிகாரிகளே வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.ஐக்கு குறைவான போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் வசூலிக்க கூடாது என தமிழக அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மோட்டார் வாகனத்திருத்த சட்டத்தின் படி அதிகரிக்கப்பட்ட அபராதத்தொகை விபரங்களை கீழே அட்டவணையில் பார்க்கலாம்...

Section/ OffenceOld PenaltyNew Penalty (Minimum)
General (177)Rs 100Rs 500
Rules of road regulation violation (new 177A)Rs. 100Rs 500
Travelling without a ticket (178)Rs 200Rs 500
Disobedience of orders of authorities (179)Rs 500Rs 2000
Unauthorized use of vehicles without licence (180)Rs 1000Rs 5000
Driving without licence (181)Rs 500Rs 5000
Driving without qualification (182)Rs 500Rs 10,000
Oversized vehicles (182B)NewRs 5000
Over speeding (183)Rs 400Rs 1000 for LMV, Rs 2000 for Medium Passenger Vehicle
Dangerous driving penalty (184)Rs. 1,000Upto Rs 5000
Drunken driving (185)Rs 2000Rs 10,000
Speeding/ Racing (189)Rs 500Rs 5,000
Vehicle without permit (192A)Upto Rs 5000Upto Rs 10,000
Aggregators (violations of licencing conditions) (193)NewRs 25,000 to Rs.1,00,000
Overloading (194)Rs 2,000, & Rs 1,000
per extra tonne
Rs 20,000 & Rs 2,000 per extra tonne
Overloading of Passengers (194A)N.A.Rs 1000 per extra passenger
Seat Belt (194 B)Rs 100Rs 1,000
Overloading of two-wheelers (194 C)Rs 100Rs 2,000,Disqualification of
licence for 3 months
Not providing way for emergency vehicles (194E)NewRs 10,000
Driving without insuarance (196)Rs 1,000Rs 2,000
Offences by Juveniles (199)NewGuardian/ Owner shall be
deemed guilty. Rs 25,000
with 3 years imprisonment.
Juvenile to be tried under JJ Act.Registration of Motor
Vehicle to be cancelled.
Power of officers to impound documents (206)N.A.Suspension of driving licence
under sections 183, 184, 185, 189,
190, 194C, 194D, 194E,
Offences committed by enforcing authorities (210B)N.A.Twice the penalty under
the relevant section

Post a Comment

0 Comments