மொகரம் பண்டிகைக்கு 11-ஆம் தேதி விடுமுறை..! தமிழக அரசு அறிவிப்பு..!இஸ்லாமிய மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மொகரம்.  இந்த பண்டிகைக்கு அரசு விடுமுறை அளிப்பது வழக்கம். இந்த ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி அன்று மொகரம் பண்டிகை கொண்டாடப்படுவதாக உள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், செப்டம்பர் 10-ஆம் தேதி அன்று விடுமுறை இல்லை என்றும், செப்டம்பர் 11-ஆம் தேதி விடுமுறை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை காஜி அரசுக்கு எழுதப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் செப்டம்பர் 11-ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது.

Post a Comment

0 Comments