புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் பின்புறம் வண்ணத்து பூச்சி பூங்கா அமைக்கப்படுமா?



புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் பின்புறம் வண்ணத்து பூச்சி பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோடடை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள மரம் செடிகொடிகள் மிகுந்த பசுமையாக காணப்படுகிறது.

 இதேபோல் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்குள் உள்ள வனப்பகுதியில் அனைத்து மரங்களும் பசுமையாக காட்சியளிக்கிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள சிறிய சிறிய செடிகளில் பல வகையான வண்ணத்துப்பூச்சிகள் பறந்து செல்கிறது.

இது பார்பதற்கு வண்ணத்துபூச்சி பூங்காப்போல் உள்ளது. பல வண்ணங்களில் வண்ணத்துப்பூச்சிகள் சுற்றி திரிவதால் அந்த பகுதியில் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

 புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் சுற்றி திரியும் பட்டாம்பூச்சிகள் மழை பெய்து குளிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் வெளியூர்களில் இருந்து வந்திருக்க கூடும் என்று வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 இன்னும் மழை தொடர்வதால் செடிகள் வளர்ந்து கலெக்டர் அலுவலகம் பகுதியில் குளிர்ச்சி அதிகரிக்கும் என்பதால் இன்னும் பல வகையான வண்ணத்துபூச்சிகள் வருகை அதிகரிக்கும் என்றும் இவ்வாறு அதிகரிக்கும் போது திருச்சி மாவட்டத்தில் உள்ள வண்ணத்துபூச்சி பூங்காபோல் கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் சிறிய வகையில் வண்ணத்துபூச்சி பூங்கா தொடங்க நடவடிக்கை எடுக்கலாம் என்று வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments