இஸ்லாமியர்கள் எல்லோருமே என் தாய்மாமன்கள் தான்... வைரமுத்து நெகிழ்ச்சி..!மொழி மீது மொழி திணிக்கப்படுவது தான் உலகின் மிகப்பெரிய வன்முறை, என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.


மறைந்த பாஜக தலைவர் வாஜ்பாய் பின்பற்றிய மதநல்லிணக்கத்தை அவரின் பின் வந்த தலைவர்களும் பின்பற்ற வேண்டும் என கவிப்பேரரசு வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நடத்தும் மத நல்லிணக்க மாநில மாநாடு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதத்தில் கூட்டம் நடத்துவதே நாகரிகத்தில் எங்கோ கறை பட்டிருக்கிறது என்பதை தான் உணர்த்துவதாக தெரிவித்தார்.

மத நல்லிணக்கம் தான் நம் மண்ணின் மாண்பு என தெரிவித்த அவர், தான் பிறந்து வளந்த பெரிய குளத்தில் இருப்பதோ இரு தாய்மாமன்கள் இரண்டு பேர் தான். ஆனால் இஸ்லாமியர்களில் எல்லாருமே என் தாய்மாமன்களாக தான் திகழ்ந்தார்கள் என்றார். மேலும் பாஜக தலைவர் வாஜ்பாயிடம் பார்த்த மதநல்லிணக்கத்தை அவருக்கு பின் வந்த தலைவர்களிடமும் இருக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோளாக இருப்பதாக தெரிவித்தார்.


இந்துக்கள் காக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய வேட்கயாக உள்ளதோ, அதோ போல் இந்தியர்கள் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய வைரமுத்து, திணித்தல் தான் தவறு, உடல் மீது உடல் திணிக்கப்படுவது, மதம் மீது மதம் திணிக்கப்படுவது, மொழி மீது மொழி திணிக்கப்படுவது தான் உலகின் மிகப்பெரிய வன்முறை என தெரிவித்தார். மேலும் நிலவில் இந்தியா இறங்கிய இந்நேரத்தில், இந்தியனை பாதாளத்தில் இறக்கி விட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்

Post a comment

0 Comments