கோபாலபட்டினம் காட்டுகுளம் தண்ணீர் வெளியேற்றும் பணி மும்முரம்..!



கோபாலப்பட்டினம் காட்டுகுளத்தில் உள்ள தண்ணீர் கடந்த ஓராண்டுக்கு மேல் ஆகியதால் குளம் மாசடைந்து கடந்த ஒரு மாதமாக துர்நாற்றம் வீசியது.
எனவே காட்டுகுளத்தில் மாசடைந்துள்ள நீரை வெளியேற்றி புதிய நீர் விட அப்பகுதி மக்கள் GPM சீரமைப்பு குழுவிடம் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் GPM சீரமைப்பு குழுவின் பொருளாதாரத்தில் மோட்டார் பம்பு செட் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குளத்து நீரை விரைவாக வெளியேற்றி பிறகு தரை காயவைக்கப்பட்ட உடனடியாக புதிய நீர் விடப்படும் என்று GPM சீரமைப்பு குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

GPM சீரமைப்பு குழு இதுபோன்ற பல சேவைகளை கோபாலப்பட்டினத்தில் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: ஆலோசனைக்குழு, GPM சீரமைப்பு குழுமம்



Post a Comment

0 Comments