R.புதுப்பட்டினம் அல்-அமீன் அணியினரால் நடத்தப்பட்ட இரண்டாம் ஆண்டு சிறுவருக்கான மாபெரும் கைபந்து போட்டி தொடர் முடிவுகள்



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகில் உள்ள R.புதுப்பட்டிணத்தில் அல்-அமீன் அணியினரால் நடத்தப்பட்ட இரண்டாம் ஆண்டு சிறுவருக்கான மாபெரும் கைபந்து போட்டி அல் அமீன்  மைதானத்தில் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
இதில் R.புதுப்பட்டினம், கோபாலப்பட்டிணம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார அணிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டி ரவூன் ராபின் அடிப்படையில் நடைபெற்றது.

கோபாலப்பட்டினம் இரு அணிகள் கலந்து கொண்டனர் (கோபாலப்பட்டினம் Al - Hamas, கோபாலப்பட்டிணம் GPM) . கோபாலப்பட்டினம் Al - Hamas அணி 2வது தகுதி சுற்றில் மற்றும் கோபாலப்பட்டினம் GPM அணியினர் 3 வது தகுதி சுற்றில் இருந்து வெளியேறிது.

இந்த போட்டியில் 3 அணிகள் பரிசுகளை வென்றனர்.இதில் முதல் பரிசு ரூ.3001 கட்டுமாவடி  அணியினர் தட்டி சென்றனர்.இரண்டாம் பரிசு ரூ.2001 R.புதுப்பட்டினம் அல் அமீன் அணியினர்  தட்டி சென்றனர். மூன்றாம் பரிசு      ரூ.1001 R.புதுப்பட்டினம் அல் அமீன் சிறுவர் அணியினர் தட்டி சென்றனர்.

பரிசளிப்பு விழாவில்  R.புதுப்பட்டினம் அல்-அமீன் அணியினர் மற்றும் வெற்றி பெற்ற அணிகள் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு GPM MEDIA சார்பாக வாழ்த்துக்கள்...

தகவல் : R.புதுப்பட்டினம் கலந்தர் பாட்சா

Post a Comment

0 Comments