பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் 16-ந் தேதி நடக்கிறது



பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2019-20-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாணவ, மாணவிகள் இருபாலருக்கும் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய 2 பிரிவுகளில் கீழ்க்கண்டுள்ள படி நடைபெற உள்ளது.

இளநிலைப் பிரிவு, மழலை வகுப்பு 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளும், முதுநிலைப் பிரிவு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளிலும் வருகிற 16-ந் தேதி காலை 9 மணி முதல் கேரம் போட்டிகள் நடைபெற உள்ளது.

ஆன்லைனில் பதிவு

மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் கண்டிப்பாக ஆன்லைனை பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும்.

www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் வருகிற 15-ந் தேதி மாலை 4 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கேரம் போட்டிகளில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒற்றையர் பிரிவில் 7 மாணவர்களும், 7 மாணவிகளும், இரட்டையர் பிரிவில் 5 மாணவர்கள் அணி மற்றும் 5 மாணவிகள் அணிகளும் கலந்து கொள்ளலாம்.

போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து, தாங்கள் எந்த வகுப்பில் பயில்பவர் என்பதற்கான சான்றினை பெற்றுவர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments