தொண்டி நகர் பகுதியில் மக்களை அச்சுறுத்தும் அதிவேக பஸ்கள்ராமநாதபுரத்திலிருந்து தொண்டி வழியாக சென்னை செல்லும் தனியார் பேருந்துகள் ஊருக்குள் வரும் போது அசுர வேகத்தில் வருகிறது.

இதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரத்தில் இருந்து நம்புதாளை தொண்டி வழியாக 10க்கும் மேற்பட்ட தனியார் பஸ் இரவு நேரத்தில் செல்கிறது.

இவை அனைத்தும் ஊருக்குள் வரும் போது ஒரு கட்டுப்பாடு இல்லாமல் மித மிஞ்சிய வேகத்தில் வருகிறது.

இது வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் லைட்டின் அளவையும் குறைப்பது கிடையாது. விபத்து ஏற்படும் பட்சத்தில் உயிர்பலி நிச்சயம் ஏற்படுகிறது.

ஊருக்குள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே செல்ல ஏதுவாக போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்து போலீசார் பஸ்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொண்டியை சேர்ந்த ஆறுமுகம் கூறுகையில்,,

தனியார் பேருந்துகளின் வேகம் அதிகமாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

இதுகுறித்து டிரைவர்களிடம் கேட்டால் வீண் பிரச்னை ஏற்படுகிறது. பொதுமக்களின் உயிர் முக்கியம் என்பதை போலீசாரும் மறந்து செயல்படுகின்றனர்.

மக்களின் நலனை கருத்தில் கொண்டு போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments