வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிப்பு..வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டையில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் செய்வதற்கான கால அவகாசம் அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

வாக்காளர்கள் இந்த திருத்தங்களை இ-சேவை மையத்தை அணுகி மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான கால அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், தற்போது அக்டோபர் 18-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் வரும் 18-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தமிழக அரசின் பொது சேவை மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இணையதள மையங்களில்  பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments