கோட்டைப்பட்டிணத்தில் பள்ளி குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா..!புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் கடந்த 11.10.2019 வெள்ளிக்கிழமை அன்று மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் KPM மழைநீர் சேகரிப்பு குழுமம் சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் கோட்டைப்பட்டினம் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சுமார் 533 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.

பின்னர் KPM மழைநீர் சேகரிப்பு குழுமம் சார்பாக யார் இந்த மரக்கன்றுகளை சிறப்பாக பராமரித்து வளர்க்கின்றார்களோ அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என்றும் பள்ளி குழந்தைகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மற்றும் இந்த KPM மழைநீர் சேகரிப்பு குழுமம் சார்பாக இப்பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளம் ஓரங்களில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மரம் வளர்ப்பு பற்றி  நபி மொழி

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

புஹாரி : 2320, அனஸ் இப்னு மாலிக் (ரலி).

தகவல்: KPM மழைநீர் சேகரிப்பு குழுமம்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments