கோபாலப்பட்டிணம் ஊர் ஜமாத் தலைமையில் 18.10.2019 அன்று மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் !!!மீமிசல் கிழக்கு கடற்கரைச் சாலையில் நாளை மறுநாள் 18.10.2019 நடைபெறவிருந்த மாபெரும் சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோபாலாபட்டிணம் ஊர் ஜமாஅத், ஊர் பொதுமக்கள், GPM பொது நல சேவை சங்கம் மற்றும் மக்கள் மன்றம் இணைந்து கோபாலப்பட்டிணத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி வருகின்ற 18.10.2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) திரு. பெரியசாமி அவர்கள் நேற்றைய தினம் கோபாலாபட்டிணத்திற்கு வருகை தந்திருந்தார்கள். அதுசமயம் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கோபாலாபட்டிணத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் பார்வைக்கு இரண்டு தினங்களில் எடுத்து செல்வதாகவும் அதேவேளையில் உடனடி நடவடிக்கையாக அவுலியா நகர் பகுதியை சரி செய்து தருகிறோம் என உறுதி அளித்துள்ளனர்.மேலும் கூறுகையில் கோபாலப்பட்டிணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியின் தொகை எவ்வளவு என்பதின் வரையறையை விரைவில் ஜமாத்திற்கு தருகிறோம் என உறுதியையும் அளித்துள்ளார்.  இதனை ஏற்றுக் கொண்ட ஜமாத் நிர்வாகத்தினர் தலைமையில் நாளை மறுநாள் 18.10.2019 அன்று நடைபெறவிருந்த மாபெரும் சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments