மீமிசலில் தமுமுக மற்றும் மமக சார்பாக நாளை 17.10.2019 நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு..!மீமிசலில் தமுமுக மற்றும் மமக சார்பாக நாளை 17.10.2019 வியாழக்கிழமை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம்  அரசு அதிகாரிகளின் உத்தரவாதத்தால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசலில் நாளை 17.10.2019 காலை 10.00 மணியளவில் மீமிசல் செக் போஸ்ட் அருகில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மீமிசல், நாட்டாணிபுரசக்குடி, பொன்னமங்கலம், மற்றும் திருப்புனவாசல் ஆகிய ஊரட்சிகளுக்குட்பட்ட இடங்களில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று துண்டு பிரசுரம் வெளியிட்டிருந்தோம்.


அதனடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் , உதவி பொறியாளர், பணிமேற்பார்வையாளர், ஊராட்சி செயலாளர்களுடன் தமுமுக மற்றும் மமக புதுக்கோட்டை மாவட்ட பொருளாளர் அஜ்மல் கான், மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் முத்துக்குடா வஹாப் , தமுமுக & மமக ஒன்றிய பொருளாளர் கோபாலப்பட்டிணம் அபுதாகிர், ஒன்றிய துனைச் செயலாளர் கலந்தர் இஸ்மாயில், கோபாலப்பட்டிணம் கிளை தலைவர் முகம்மது மசூது, முத்துக்குடா கிளை செயலாளர் அபுதாகிர், ஆர்.புதுப்பட்டிணம் முன்னாள் நிர்வாகி அப்துல் ஹமீது, அன்வர் பாட்சா, செய்யது அப்பாஸ், நைனா முகம்மது, பொய்யாதநல்லூர் நூர், அப்துல் சலாம், சேக் அப்துல்லா, ஜமாத் நிர்வாகிகள், முத்துக்குடா ஜமாத் நிர்வாகிகள், அரசநகரிப்பட்டினம் ஜமாஅத் தலைவர் மதார்ஷா, கான், சாகுல் ஹமீது ஆகியோரும் நேரடியாக மேற்கண்ட அதிகாரிககள் கள ஆய்வு செய்தனர்.

மேலும் இந்த சாலைகள் சம்மந்தமாக மதிப்பீடு செய்து சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்து பூர்வமாக எழுதி கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் தற்காலிகமாக சாலை மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்படுக்கின்றது என தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல்: A.அப்துல் சுக்கூர், ஒன்றிய செயலாளர், தமுமுக.கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments