2020-இல் ஹஜ் பயணம்: நவ. 10-க்குள் ஆன்லைனில் பதிவு செய்யலாம்




அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோா், வரும் நவம்பா் மாதம் 10-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயல்படுத்தி வருகிறது.

2020-இல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சோ்ந்த இஸ்லாமிய மக்களிடமிருந்து, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு மும்பை இந்திய ஹஜ் குழு சாா்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

2020-ஆம் ஆண்டு முதல் ஆன்லைனில் மட்டுமே ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க இயலும் என இந்திய ஹஜ் குழு தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரா்கள் இணையதளம் வழியாகவோ அல்லது ஏஇா்ஐ என்ற ஹஜ் குழு செல்லிடப்பேசி செயலி வழியாகவோ நவ.10-ஆம் தேதிக்குள் வெள்ளை நிற பின்னணியுள்ள புகைப்படம், இந்திய பன்னாட்டு கடவுச்சீட்டு (2021-ஆம் ஆண்டு ஜன.20 வரை செல்லத்தக்கது), முகவரி சான்று, ஒரு நபருக்கு ரூ.300 வீதம் செலுத்தப்பட்ட வங்கி ரசீது அனைத்தையும் விண்ணப்பத்துடன் ஆன்லைன் மூலம் மட்டும் பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப நேரடியாகவோ, மாவட்டங்களிலுள்ள ஹஜ் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது தமிழ்நாடு மாநில ஹஜ் குழு அலுவலகம் மூலமாகவோ பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்திய ஹஜ் குழுவின் ஹஜ் தகவல் மையத்தை, 022 2210 7070 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments