சிறப்பாக முதல் சேவையை துவங்கிய GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ்...சிறப்பாக செயல்பட்டு மூன்று உயிர்களை காப்பாற்றிய GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் சேவை.

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் கடந்த 19.10.2019 சனிக்கிழமை அன்று GPM மக்கள் மேடை கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நடைபெற்றது.

 அதனடிப்படையில் GPM மக்கள் மேடையின் ஆம்புலன்ஸ் சேவை நேற்று 23.10.2019 புதன்கிழமை தனது முதல் பணியை மிக சிறப்பாக மூன்று நபரின் உயிரை காப்பாற்றியுள்ளது.

 ஜெகதாப்பட்டிணம் பாரத் பெட்ரோல் பங்க் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் அதில் இரண்டு நபர்கள் லேசான காயங்களுடனும் வயதான பாட்டி பலத்த காயங்களுடன் அடிபட்டு கிடந்தார். இதனிடையே அந்த பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தனர். ஆனால் அவ்விடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வரவில்லை.

 எனவே சமீபத்தில் கோபாலப்பட்டிணத்தில் அர்ப்பணிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் பற்றி கேள்விபட்ட அந்த பகுதியை சார்ந்த ஒருவர் கோபாலபட்டிணத்தில் அவருடைய நண்பரை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் நம்பரை வாங்கி நிலைமை பற்றி ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் விவரித்தார்.

உடனே அந்த செய்தியை உறுதிப்படுத்திய GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கோபாலப்பட்டிணத்தில் இருந்து ஜெகதாப்பட்டிணத்திற்கு மூன்று நிமிடங்களில் சென்று முதலில் பலத்த காயமடைந்த பாட்டியை பரிசோதித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அசார் உயிர் இருப்பதை உறுதிப்படுத்தியவர் உடனடியாக அடிபட்ட மூவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று சேர்த்தார்.

இதனிடையே பலத்த காயமடைந்த பாட்டிக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் அரசு மருத்துவமனை மருத்துவர் அவர்கள் GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் நீங்கள் சரியான நேரத்தில் கொண்டுவந்து சேர்த்துள்ளீர்கள், இந்த இளம் வயதில் உங்கள் சேவை பாராட்டுக்குரியது மேலும் சிறப்புடன் செயல்பட வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

மணமேல்குடியை சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவரும் GPM மக்கள் மேடையின் ஆம்புலன்ஸ் சேவை சிறந்து விளங்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

சிறப்பாக செயல்பட்டு மூன்று உயிர்களை காத்த GPM மக்கள் மேடையின் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த அசாருதீன் அவர்களுக்கு GPM மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments