புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 நாளாக தொடர் மழை



புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவில், புதுக்கோட்டை நகரில் அதிகபட்சமாக 55.20 மிமீ மழை பதிவானது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் மழை பெய்து வருகிறது. கடலோரப் பகுதியிலும் புதுக்கோட்டை நகரப் பகுதியிலும் கனமழை பெய்தது. வைத்தூர் பகுதியில் மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். மணமேல்குடி வட்டம் கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த இந்திரா என்பவரின் மாடு ஒன்றும் மழையால் உயிரிழந்தது. இதுமட்டுமின்றி பொன்னமராவதி, கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, மணமேல்டி, ஆலங்குடி அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக கனமழை நீடித்து வருகின்றனர். இதனால் நீர்நிலைகள் ஓரளவு நிரம்ப துவங்கியுள்ளது. இம்மழை மானாவாரி சாகுபடி பயிர்களுக்கு ஏற்றதாக உள்ளதாகும், சம்பா பயிருக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவு விவரம் மி.மீட்டரில்:

ஆதனக்கோட்டை- 13, பெருங்களூர்- 15.80, புதுக்கோட்டை நகரம்- 55.20, ஆலங்குடி- 4.80, கந்தர்வக்கோட்டை- 5, கறம்பக்குடி- 32.20, மழையூர்- 15.20, திருமயம்- 6.20, அரிமளம்- 37.20, அறந்தாங்கி- 7, ஆயிங்குடி- 3.40, நாகுடி- 3.40, மீமிசல்- 54.20, ஆவுடையார்கோயில்- 25.40, மணமேல்குடி- 40.60, கட்டுமாவடி- 40.60, இலுப்பூர்- 2, குடுமியான்மலை- 2, அன்னவாசல்- 5, விராலிமலை- 15.20, உடையாளிப்பட்டி- 12.20, கீரனூர்- 2.80. மாவட்டத்தின் சராசரி மழை- 15.96. இந்த மழை நேற்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து நீடித்தது. வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் தொடர்ச்சியாக விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த மழையையொட்டி விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள். தங்களது நிலங்களை டிராக்டர் கொண்டு உழுது வருகின்றனர். சில பகுதிகளில் நெல் நாற்றாங்கால்கள் நடப்பட்டு வருகின்றன. விவசாய கூலியாட்களை கொண்டு ஒருபுறத்திலும், நடவு கருவியை பயன்படுத்தி மற்றொரு புறத்திலும் என விவசாய பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. நீண்ட நாட்களாக மழை பெய்யாத காரணத்தினால் வறண்டு கிடந்த கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தில் தற்போது தொடர் மழையினால் ஆங்காங்கே மழை தண்ணீர் தேங்கி கிடக்கின்றன.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments