அறந்தாங்கி அருகே போதை மாத்திரைகள் விற்ற பெண் உள்பட 4 பேர் கைது



புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள நாகுடி பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நாகுடி பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனையை கண்காணிக்கும்படி, நாகுடி போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், நாகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நவீன்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் நாகுடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

4 பேர் கைது

அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த செல்வராஜ் மகன் வினோஜெகன் (வயது 28)  அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் வாசு (31) ஜெகன் மனைவி பானுமதி (31)  திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த கவுதம்ராஜா (27) ஆகியோர் போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 100 போதை மாத்திரைகள், 10 போதை ஊசிகள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments