புதுக்கோட்டையில் 827 பேருக்கு ரூ.25 கோடி கடன் உதவி மாவட்ட ஆட்சியர் தகவல்.



புதுக்கோட்டையில் நடந்த விழாவில் 827 பேருக்கு ரூ.25 கோடி கடன் உதவிகளை கலெக்டர் உமாமகேஸ்வரி வழங்கினார்.

பொதுத்துறை வங்கிகளின் சார்பில் வாடிக்கையாளர் மேம்பாட்டிற்கான வழிக்காட்டுதல் முகாம் புதுக்கோட்டை டவுன் ஹாலில் நடைபெற்றது.

இந்த முகாமை கலெக்டர் உமா மகேஸ்வரி தொடங்கி வைத்து, 827 பேருக்கு ரூ.25 கோடி அளவிற்கு பல்வேறு கடன் உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், இந்த முகாமைபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் இம்முகாம்கள் நடத்தி வாடிக்கையாளர்களுக்கு வங்கி கடன் உதவி வழங்கிட வங்கியாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் உதவி மட்டும் வழங்காமல் மாவட்டத்தில் பின் தங்கியுள்ள பகுதிகளில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு குக்கிராமத்தை தேர்ந்தெடுத்து அக்கிராமத்தில் மத்திய, மாநில அரசுகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் பயனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்யவும் அவ்வாறு செய்யும் பணிகள் குறித்த விபரங்களை ஒவ்வொரு மாதமும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் வங்கியாளர்கள் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

இதில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரமேஷ், வங்கியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments