புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும்



தற்போது பெய்து வரும் மழைநீரை பயன்படுத்தி கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்குவதற்கு பழங்கால முறைப்படியான உள்ளூர் நீராதாரங்களை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளாக கடும் வறட்சிடைந்துள்ளது. இதனால் விவசாயம் பொய்த்துபோய் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை ஏற்பட்டு பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கடந்த கோடை காலங்களை காட்டிலும் இந்த முறை கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நாடு முழுவதும் காணப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடு முன்னேப்போதும் இல்லாத வகையில் பராளுமன்றத்தில் திமுக எம்பிகள் கேள்வி எழுப்பி பாஜக எம்பிகளை திணரடித்தனர்.

குறிப்பாக 226 மாவட்டங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு இருப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் பேசும் அளவுக்கு சிக்கல் அதிகரித்திருக்கிறது.

இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது பழங்கால குடிநீர் ஆதாரங்களை நாம் கவனிக்க தவறி, அழித்ததுதான் என இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை தொண்டைமான் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் சமஸ்தான பகுதி முழுவதும் ஏறத்தாழ 600 குளங்கள் வெட்டி, முறையாக பெருங்கற்களை கொண்ட கரைகள் கட்டப்பட்டு அழகான படிகள் அமைக்கப்பட்டு அவை பராமரிக்கப்பட்டன.

பெரும்பாலும் மழை நீரும், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கிடைக்கும் குளங்களின் வரத்து நீரும் இதற்கான நீர்வரத்து ஆதாரங்கள். மாசுபடாமலும் பராமரிக்கப்பட்டன.

காலப்போக்கில் எல்லாவற்றையும் அழித்துவிட்டோம், இப்போது எங்காவது பெரு நதிகளில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் அவற்றில் நீர் வரண்டால் சுற்றுவட்டாரத்திலுள்ள பல மாவட்டங்கள் குடிநீரின்றித் தவிப்பது இயல்பாகிவிட்டது

புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை தற்போதைய நிலவரப்படி அரிமளம் நகர பகுதியில் உள்ள கோயில் குளங்கள் மட்டுமே நல்ல கரைகளுடன் வேலி அமைக்கப்பட்டு மாசுபடாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது. சுத்தமான தண்ணீரும் தேங்கிக் கிடக்கிறது.

இவற்றை தவிர மாவட்டத்திலுள்ள எந்த குளங்களிலும் இப்போது தண்ணீர் இல்லை. மேலும், கரைகள் உடைந்து சிதிலமடைந்து, குளத்துக்குள் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. வரத்துக் கால்வாய்களை சொல்லவே வேண்டாம், எதுவும் பயன்பாட்டில் இல்லை என்கிறார்கள்.

அனைத்தும் பல இடங்களில் ஆக்கிரமிப்பு  செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல நேரங்களில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வரத்து வாரிகளை சீர் செய்ய வேண்டும் என்றுகோரிக்கை வைத்த வண்ணம் இருக்கின்றனர்.

 குறிப்பாக திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் பிரதான சாலையில் வலதுபுறத்தில் உள்ள அம்மாசத்திரம் ஊராட்சிக்குள்பட்ட சாலையோரத்திலுள்ள அகண்ட அழகிய குளம் இப்போது சிதிலமடைந்து காணப்படுகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:

கோடைகாலத்தில் மட்டுமே கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைத் தவிர்த்த உள்ளூர் நீராதாரங்களை தேடும் உள்ளாட்சி அமைப்பினர், நிரந்தரமாக உள்ளூர் நீராதாரங்களைப் புனரமைத்து பயன்படுத்தும் நடைமுறையை கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குளங்களை முறையாக தூர்வாரி, பழைய முறைப்படி முறையான கரைகளை கட்டி, மாசுபடாமல் பாதுகாத்து மழை நீரை தேக்கி வைத்துக் கொள்வது எதிர்காலக் குடிநீர்ப் பஞ்சத்தை விரட்டும்.

 விவசாயத்துக்கான கண்மாய்களை சீரமைக்கும் திட்டங்களை வகுத்ததைப் போல குடிநீராதாரமாக விளங்கிய பழங்கால குளங்களை சீரமைத்துப் பாதுகாக்கும் திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி புனரமைக்க வேண்டும் என்கிறனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments