ஆவுடையார்கோவிலில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி



ஆவுடையார் கோவில் ஒன்றியத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிகளுக்கு அறிவியல் கண்காட்சி ஒன்றிய அளவில் நடைபெற்றது.


இக்கண்காட்சி முதன்மைக்கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. அறிவியல் கண்காட்சியை வட்டார கல்வி அலுவலர் லதாபேபி தலைமையிலும் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அனிதா முன்னிலையிலும் ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

அறிவியல் கண்காட்சியில் 21பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு அறிவியல் கண்காட்சியிலும் மாணவர்களின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்தது.

அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதத்தில் மாணவர்களின் செயல்பாடுகள் மற்றும் படைப்புகள் விளக்கும் விதம் மிக அருமையாக இருந்தது.

இக்கண்காட்சியில் பரமந்தூர் தலைமையாசிரியர் நல்ல முகமது, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரூர் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் குமார், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தச்சமல்லி அறிவியல் ஆசிரியர் கிங்ஸ்டன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பாண்டி, பத்திரம் தலைமை ஆசிரியர் சுந்தரமணி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

இக்கண்காட்சியை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆவுடையார் கோயில் தலைமை ஆசிரியர் லட்சுமி காந்தன், இக்கண்காட்சி காண அனைத்து ஏற்பாடுகளையும் மிகச்சிறப்பாக செய்திருந்தார்.

கண்காட்சியில் முதல் இடத்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பரமந்தூர் பள்ளியும், இரண்டாமிடத்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி விளானூரும், மூன்றாம் இடத்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வேள்வரையும் பெற்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments