அன்லிமிடட் சலுகைகளோடு ஜியோ புதிய பிளான்!ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்கள் வாடிக்கையாளருக்கு அன்லிமிடட் சலுகைகளோடு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன், பிற நெட்வொர்க் மொபைல்களுக்கு அழைக்க கூடுதல் கட்டணமாக நிமிடத்திற்கு 6 பைசா விதம் கட்டணத்தை அறிவித்தது. இதற்காக ரூபாய் 10 முதல் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்தது.

பிற நெட்வொர்க்குகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை ட்ராய் அறிவித்தபடி, வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிப்பதாகவும், இது விரைவில் ரத்தாகும் என்றும் தெரிவித்திருந்தது ஜியோ நிறுவனம். இந்நிலையில், அவுட்கோயிங் கால்களில் எந்த தடங்கலுமின்றி பேச புதிய பிளான்களை ஜியோ அறிவித்துள்ளது.
அதன் படி,

மாதம் ரூபாய் 222 கட்டணத்தில் தினமும் 2 ஜிபி + அலிமிடட் அவுட்கோயிங் கால்கள்

2 மாதத்திற்கு ரூபாய் 333 கட்டணத்தில் தினமும் 2 ஜிபி + அன்லிமிடட் அவுட்கோயிங் கால்கள்

இந்த பிளான்படி, மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த கட்டணமாகும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments