மீமிசலில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: 9 கடைகள் எரிந்து நாசமாகின — பல லட்ச ரூபாய் பொருட்கள் சேதம்!



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேருந்து நிலையம் அருகே நள்ளிரவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஒரு கடையில் பிடித்த தீ, மளமளவென அடுத்தடுத்த கடைகளுக்கும் வேகமாகப் பரவியதில் அங்கிருந்த 9 கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். நள்ளிரவு நேரத்தில் இச்சம்பவம் நடந்ததால், கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தன.

அதிர்ஷ்டவசமாக இத்தீ விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் மின் கசிவா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments