10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான நேரம் 3 மணிநேரமாக அதிகரிப்புபத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நேரம் மூன்று மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறை கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு முக்கிய மாற்றங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தற்போது 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கானத் தேர்வு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது, மாணவர்களுக்கானத் தேர்வு நேரம் 2.30 மணி நேரமாக உள்ளது. வரும் கல்வியாண்டில் புதிய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வு நடத்தப்படவுள்ளன. எனவே, மாணவர்கள் கேள்வித் தாள்களைப் புரிந்து கொள்வதற்காக தேர்வு கால நேரம் அரை மணி நேரம் அதிகரிக்கப்பட்டு 3 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை வரும் கல்வியாண்டு முதலே நடைமுறைக்கு வருகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments