புதுக்கோட்டை மீமிசலில் பயங்கர தீ விபத்து: அரசு நிவாரணம் வழங்குக: மஜக மாவட்ட செயலாளர் கோரிக்கை



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அடுத்த மீமிசல் பகுதியில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய நிவாரணத்தை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேருந்து நிலையம் அருகில் 9 கடைகள் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு எரிந்து நாசமாயின. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்.

நள்ளிரவில் திடீரென கடைகளில் தீப்பற்றிய நிலையில், தீ மளமளவென பரவி அடுத்தடுத்த கடைகளுக்கும் தீ பரவியது. 

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. 

அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இந்த தீ விபத்து மின் கசிவா அல்லது வேறேதும் காரணமா என  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போர்க்கள அடிப்படையில் கோட்டாட்சியர் அல்லது வட்டாட்சியர் தலைமையில் மதிப்பீடுகள் செய்து உடனடியாக அரசு நிவாரணம் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என குறிப்பிட்டுள்ளார்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments