கட்டுமாவடியை அடுத்த செம்பியன் மகாதேவிப்பட்டினம் ஜமாத்தார்கள் சார்பாக நடைபெற்ற மரம் நடும் விழா..!



புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியை அடுத்த செம்பியன் மகாதேவிப்பட்டிணத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட் ஜமாத் சார்பாக 02.10.2019 புதன்கிழமை அன்று மரம்  நடும் விழா நடைபெற்றது.
அதன்படி செம்பியன் மகாதேவிப்பட்டினம் பள்ளிவாசல் மற்றும் மைத்தாங்கரை சுற்றிலும்
தென்னை, மாங்கண்டு ,வேப்பமரம் , தேக்கு போன்ற 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.

இதில் செம்பியன் மகாதேவிப்பட்டினத்தை சேர்ந்த ஜமாத் தலைவர் ஜனாப். JB.அப்துல் அஜிஸ், ஜமாத் துணைத் தலைவர் ஜனாப். RKM.முகம்மது யாசின், ஜமாத் செயலாளர் ஜனாப் முகம்மது அலி, ஜமாத் துணை செயலாளர் ஜனாப். M. ஜாகிர் உசேன்,  ஜமாத் பொருளார் ஜனாப். முகம்மது இப்ராஹிம், ஜமாத் உறுப்பினர் ஜனாப். SMR.அப்துல் அஜிஸ் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள்,  தன்னார்வலர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்வமுடன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள்.




 இதன் மூலம் சுற்று வட்டார ஜமாத்தார்களுக்கு ஓர் முன்னுதாரணமாகவும் வரும் காலங்களில் பல உயிரிணங்களுக்கு பயன் தரும் வகையிலும் மற்றும் ஊர் நலனை கருத்தில் கொண்டு  சுகாதாரமான சுற்றுசூழலை உருவாக்கிட செயல்படும் செம்பியன் மகாதேவிப்பட்டினம் ஜமாத்தார்களுக்கு

GPM மீடியாவின் சார்பாக மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மரம் வளர்ப்பு பற்றி  நபி மொழி 

மரம் நடுவது ஒரு முஸ்லிமின் பொறுப்பு.

மரம் நடுவதை, இஸ்லாம் நன்மையாக கணக்கீடு செய்து, தர்மமாக ஊக்குவிக்கின்றது.

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2320, அனஸ் இப்னு மாலிக் (ரலி).

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments