கிராம பஞ்சாயத்துகளுக்கு செய்யப்படும் வரவு செலவுகளை மத்திய அரசின் பொதுநிதி மேலாண்மை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதால் அனைத்து கிராம பஞ்சாயத்துகளின் வரவு செலவுகளை மத்திய நிதி அமைச்சகத்தின் மத்திய கணக்கு துணை இணையத்தின் வழியாக நேரடியாக கண்காணிக்க தொடங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 கிராம பஞ்சாயத்துகள் உள்ளது. ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஊராட்சி செயலாளர்கள் பணியில் இருந்து வருகின்றனர். கிராம பஞ்சாயத்துகளை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 13 ஊராட்சி ஒன்றிய அலுவலங்கள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் இரண்டு பிடிஓக்கள் மற்றும் துணை பிடிஓக்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் இருப்பார்கள். இவர்கள் கிராம பஞ்சாயத்துகளில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, தூய்மை பணி உள்ளிட்ட பணிகளை கண்காணிகப்பாளர்கள்.
ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் தனித்தனி பஞ்சாயத்து அலுவலகங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு ஊராட்சி செயலாளர்கள் பணியில் இருப்பார்கள். இந்த பணியில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் அனைத்து பணிகளையும் மேற்கொள்வார்கள். வரவு செலவு கணக்குகளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமர்ப்பிப்பார்கள். ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் தனித்தனியாக தேசிய மையமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
அந்த வங்கிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டு வந்தது. அதாவது பஞ்சாயத்தில் ஒரு தெருவிளக்கு சரி செய்தல், குடிநீர் மோட்டார் பழுது நீக்குதல் பணி மேற்கொண்டால் அந்த பணியாளர்களுக்கு பஞ்சாயத்து சார்பில் காசோலை வழங்கப்படும். இந்த காசோலையில் மக்கள் பிரதிநிதிகள் இருந்தவரை பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர் கையொப்பம் இட்டு வழங்குவார்கள். அவர்கள் வங்கிக்கு சென்று பணம் பெற்றுக்கொள்வார்கள். தற்போது மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் பஞ்சாயத்துகளில் செலவு செய்யப்படும் தொகைக்கான காசோலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கையெழுத்து போட்டு வழங்கி வந்தனர்.
இந்நிலையில் இந்த மாதம் முதல் தேதியில் இருந்து இந்த வரவு செலவு திட்டமும் நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய கணக்கு துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பொது நிதி மேலாண்மை திட்டத்தில் (PFMS) https://pfms.nic.in/NewDefaultHome.aspx கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இனி எந்த பஞ்சாயத்துகளில் செலவு செய்யும் தொகையை எடுத்து உரிவயர்களிடம் கொடுக்க காசோலைகள் பயன்படுத்த முடியாது. இதனால் உரியவர்களுக்கு மட்டுமே பணம் சென்று சேரும். இதில் எந்த முறைகேடும் செய்வது கடினம். குறிப்பாக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளில் நடக்கும் வரவு செலவுகளை மத்திய தணிக்கை துறை இணையளத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.