புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளக் காலத்தில் மின்வாரியம் சம்மந்தப்பட்ட புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு..!



புயல் மற்றும் வெள்ளக் காலத்தில் மின்வாரியம் சம்மந்தப்பட்ட இடர்பாடுகள் களைய கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள்
தெரிவித்ததாவது.

புயல் மற்றும் வெள்ளக் காலத்தில் மின்வாரியம் சம்மந்தப்பட்ட இடர்பாடுகள் களைய கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

அவசர உதவிக்கு மத்திய கட்டுப்பாட்டு அறை: 9445853884, 9445853885,
944585353886.
புதுக்கோட்டை பகுதி: 9445853904, 9445853905, 9445853906,
கந்தர்வக்கோட்டை பகுதி: 94458553909,
அறந்தாங்கி பகுதி: 9445854224, 9445854225, 9445854226,
கீரமங்கலம் பகுதி: 9444099402,
ஆலங்குடி பகுதி: 9444099398, 9445854227, 9445854228,
வடகாடு பகுதி: 9444099401,
கறம்பக்குடி பகுதி: 9444099400,
கீரனூர் பகுதி 9445854263, 9445854264, 9445854265,
விராலிமலை மற்றும் இலுப்பூர்: 9445854266, 9445853908,
திருமயம் பகுதி: 94458542484, 9445854285,
பொன்னமராவதி பகுதி: 9445854286 என்ற எண்ணில் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பி.உமா மகேஸ்வரி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

மழைக்காலத்தில் முன்னெச்சரிக்கையாக செயல்படுவது எப்படி.?

வடகிழக்கு பருவ மழை, புயல் மற்றும் வெள்ள காலத்தில் மின் விபத்துகளை தவிர்க்கும் வகையில் பொது மக்கள் மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள், ஸ்டே வயர்கள் ஆகியவற்றை தொடக் கூடாது. மழையாலும், பெருங்காற்றாலும் மின்சாரக் கம்பிகள் அறுந்து கிடந்தால் அதைத் தொடாமலும், மற்றயாரையும் தொடவிடாமல் மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மின்கம்பித்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும். மின்கம்பங்களிலோ அல்லது மின்பாதைக்கு அருகிலோ விளம்பரப் பலகைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

மின் வாரியத்தின் மின்சாரக்கம்பிகளில் மழையின் காரணமாக மரக்கிளை
ஏதேனம் விழுந்து விட்டால் அதனை தன்னிச்சையாக அகற்ற முற்படாமல்
உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்
கசிவினால் ஏற்படும் மின்விபத்துகளை தவிர்க்க நுகர்வோர் கண்டிப்பாக எர்த்
லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் கருவியை பொருத்த வேண்டும்.

 மேல்நிலை மின்கம்பிகள் அருகில் வீடு கட்டுவதை தவிர்க்க வேண்டும்.
வீடு கட்டுவதற்கு முன் அருகில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்தின்
ஆலோசனையைப் பெற்று தீர்மானிக்க வேண்டும். மேல்நிலை மின்கம்பியின்
உயரத்தை தொடுமளவிற்கு ஏணி, ஈரக்கட்டை மற்றும் இரும்புகம்பிகள்,
கட்டுமானப்பொருட்கள் போன்ற பொருட்களைக் கொண்டு செல்லுதல் கூடாது. மேல்நிலை மின்கம்பிகள் செல்லும் இடங்களில் கட்டுமான மற்றும் இதர பொருட்களை ஏற்றவோ, இறக்கவோ, லாரி போன்ற பொருட்களைக் கொண்டு செல்லதல் கூடாது.

மின்வேலைகளை தரமற்ற மின்பொருட்களைக் கொண்டு செய்யக் கூடாது.
மின்வாரியத்தின் உரிய அனுமதியில்லாமல் வேறு கட்டிடங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லக் கூடாது. ஈரக்கைகளால் மின் சதனங்களை இயக்கக் கூடாது. ஜ.எஸ்.ஜ முத்திரை பதிக்கப்பட்ட மின்பொருட்களை சான்றளிக்கப்பட்ட எலக்டீரிசியன் மூலமே பொருத்த வேண்டும். வீட்டில் வயரிங் செய்வதற்கு ஜ.எஸ்.ஜ தரமான வயர்களை உபயோகிக்க வேண்டும். பழுதான வயர்களை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

கட்டுமானப் பணிகளின் போது மொசைக், டைல்ஸ் போடுதல், வெல்டிங்
செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் போது வயர்கள் ஈரம் படாமல்
கவனமாக கையாளப்பட வேண்டும். சாக்கெட் பிளக் செருகும் போது மெட்டல்
பார்ட்ஸை தொடாமல் சொருக வேண்டும். தரமான எக்ஸ் டென்சன் பாக்ஸை
மட்டுமே தரையில் வைக்காமல் உயரமான இடத்தில் வைத்து உபயோகிக்க
வேண்டும். 3 பின் பிளக்கில் எர்த் இணைப்பு கணடிப்பாக செய்யப்பட வேண்டும்.
மெயின் ஸ்விட்ச் ஆப் செய்யாமல் எந்த புதிய மின் ஒயரிங்கும் செய்யக் கூடாது.

இன்சுலேஷன் இல்லாத மின்சார வயர்கள் மற்றும் அறுந்து மற்றும் பழுதடைந்த மின் வயர்கள் ஒட்டுப்போட்டு உபயோகிக்கக் கூடாது. கட்டுமானப் பணியில் நீர் தெளிக்கும் போது மின்சார சாதனங்கள் மற்றும் மின் வயர்கள் மீது படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments