புதுக்கோட்டை மாவட்ட அளவில் பெண்களுக்கான ஆக்கி போட்டி நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்ட அளவில் பெண்களுக்கான ஆக்கி போட்டி புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டி 14 வயதுக்கு உட்பட்டவர்கள், 17 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆகிய 3 பிரிவுகளில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த அணியினர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

இதில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் சென்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், 17 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் மவுன்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும், 19 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் சென்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும் பிடித்தன.

இதில் பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், உடற்கல்வி இயக்குனர் சண்முகநாதன், உடற்கல்வி ஆசிரியர் நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஒரு போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது ஒரு மாணவிக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.இதையடுத்து அந்த மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments