கோட்டைப்பட்டிணம் ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்காவில் வெகு விமரிசையாக நடைபெற்ற சந்தனகூடு ஊர்வலம் மற்றும் கந்தூரி விழா..



புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்ஹா கந்தூரி விழா நடைபெற்றது பல்லாயிரக்கனக்கான மக்கள் பங்கேற்பு.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் மீன்பிடித்தளம் அருகே அமைந்துள்ளது ராவுத்தர் அப்பா தர்ஹா இந்த தர்ஹா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த தர்ஹாவிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகம்,உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தினந்தோறும் எண்ணற்ற மக்கள் வந்து செல்கின்றனர்.இந்த தர்ஹாவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு சிறப்பாக கொண்டாப்படும்.அதே போல் இந்த வருடமும் கடந்த 04.10.2019 அன்று கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது அன்று மாலை ரதம் ஊர்வலம் நடைபெற்றது பின்னர் தினந்தோறும் இரவு தர்ஹாவில் பாத்திஹா (குர்ஆன்) ஓதப்பட்டு நார்ஷா வழங்கப்பட்டது.

இந்நிலையில் 10-வது நாளான இன்று கந்தூரி விழா நடைபெற்றது கந்தூரி விழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் தர்ஹா அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணிக்கு கூட்டுக்கொட்டகையில் இருந்து  அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தாரை தப்பட்டை அதிநவீன வானவேடிக்கைகளுடன் புறப்பட்டு முக்கிய வீதி வழியாக சென்று தர்ஹாவை வந்தடைந்தது. பின்பு ராவுத்தர் அப்பா அடக்கஸ்தளத்தில் மலர்களால் அலங்கரிக்கப்படு சந்தனம் பூசப்பட்டது.

இந்த கந்தூரி விழாவிற்கு இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பல மதத்தவர்களை சேர்ந்த பல்லாயிரக்கனக்கான மக்கள் கலந்து கொண்டனர் மற்றும் 50க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் சுமார் 300 க்கும் போலிசார் ஈடுப்படிருந்தனர். அவசர உதவிக்காக தீயனைப்பு துறையினர், 108 ஆம்புலன்ஸ் ஆகியவை தயார் நிலையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர். விழாக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜமாத்தார்களும் கந்தூரி கமிட்டியார்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.


மதநல்லிணக்க விழா

இந்த கந்தூரி விழா மதநல்லிணக்க விழாவாக தொர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த கந்தூரிவிழாவிற்கு முதல்நாள் மண்டகப்படியை பத்தர் குடும்பத்தினர் காங்காலமாக செய்து வருகின்றனர். மேலும் தர்ஹாவை பராமரித்தல், சந்தனக்கூட்டிற்கு முன்பு தீ பந்தம் ஏந்தி செல்லுதல் சந்தனக்கூட்டை வடம்பிடித்து இழுத்தல் ஆகியவை அனைத்தையும் கோட்டைப்பட்டிணத்தை சுற்றியுள்ள நட்பு கிராமமான கொடிக்குளம், இரளிவயல் பகுதியை சேர்ந்த பிற மதத்தவர்கள் தான் காலங்காலமாக செய்து வருகின்றனர்.

ராவுத்தர் அப்பாவும் முனியய்யாவும் உற்ற தோழராக இருந்துள்ளனர் இதனால் ராவுத்தர் அப்பா அடக்கஸ்தளம் அருகேயே முனியய்யா கோவிலும் அமைந்துள்ளது. தர்ஹா எவ்வாறு வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதோ அதே போல் முனியய்யா கோவிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜையும் நடைபெறும். எனவே மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக  கோட்டைப்பட்டிணம் ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்ஹா கந்தூரி விழா விளங்குகிறது.

நன்றி: புதுகை வரலாறு
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments