கட்டுமாவடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சேதமடைந்துள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை-கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது கட்டுமாவடி.
இந்த சாலை வழியாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அவற்றில் அதிக உயரம் கொண்ட கண்டெய்னர், ஆம்னி பஸ்களும் அடங்கும்.
கட்டுமாவடிக்கும் காரக்கோட்டை பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை ஓரமாக உள்ள ஒரு மின்கம்பம் சேதமடைந்துள்ளது.
லேசான காற்று வீசினாலே கீழே விழும் நிலையில் அந்த மின்கம்பம் உள்ளது.
வாகனங்கள் செல்லும் போது மின்கம்பம் கீழே விழுந்தால், மிகப்பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது உள்ள நிலையில் மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின்வயர்கள், உயரமான வாகனங்களில் உரசும் நிலையில் உள்ளது. இதனாலும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கட்டுமாவடி அருகே சேதமடைந்துள்ள மின்கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.