கோட்டைப்பட்டிணத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டிபுதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் பகுதியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் ஸ்பார்டன் அணியினர் சார்பாக மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.

இரவு போட்டிகளாக கடந்த 10.10.2019 முதல் 12.10.2019 வரை நடைபெற்ற ஆட்டத்தில் புதுக்கோட்டை, திருச்சி,தூத்துக்குடி,திருவாரூர்,போன்ற 16 அணிகள் கலந்துக் கொண்டனர்.

இந்த போட்டியில் இறுதி ஆட்டத்தில் புதுக்கோட்டை அணியினரும் கோட்டைப்பட்டினம் அணியினரும் மோதின.

இதில் புதுக்கோட்டை அணியினர் 2-1 என்ற கணக்கில் கோட்டைப்பட்டிணம் அணியினரை வீழ்த்தி முதல் பரிசு ரூ.20 ஆயிரத்தை தட்டி சென்றனர். இரண்டாவது பரிசு ரூ.15 ஆயிரத்தை கோட்டைப்பட்டிணம் அணியினரும் மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரத்தை திருவாரூர் மாவட்டம் அணியினரும் பெற்றனர்.

வெற்றி பெற்ற அணியினருக்கு கோட்டைப்பட்டிணம் DSP மற்றும் கோட்டைப்பட்டிணம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மணமேல்குடி அதிமுக ஒன்றிய செயலாளர் துரைமாணிக்கம் ஆகியோர் வழங்கினர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments