தஞ்சை மண்டல அளவிலான கால்பந்துப் போட்டிகள்!பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட தஞ்சை மண்டல அளவிலான கால்பந்துப் போட்டிகள் புதுக்கோட்டை மன்னா் கல்லூரியில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் நடைபெற்றது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட தஞ்சை மண்டல அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயா கால்பந்துப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 8 கல்லூரி அணிகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்றன.

இதில் தஞ்சை அன்னை வேளாங்கண்ணி கல்லூரி மற்றும் புதுக்கோட்டை மன்னா் கல்லூரி அணிகள் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற இரு அணிகளும் வரும் அக். 23, 24, 25 தேதிகளில் திருச்சி தூய வளனாா் கல்லூரியில் நடைபெறவுள்ள பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்கின்றனா். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் ஜெ. சுகந்தி, பல்கலைக்கழக விளையாட்டுக் குழுச் செயலா் அ. பழனிசாமி, ஆண்கள் பிரிவு ஒருங்கிணைப்பாளா் சிறீதரன் தங்கதுரை, சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவா் கதிரேசன், கல்லூரி உடற்கல்வி இயக்குநா் இ. ஜான் பாா்த்திபன், பயிற்றுநா் அ.க. ராம்குமாா் உள்ளிட்டோரும் செய்திருந்தனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments