கோபாலப்பட்டிணம் சுற்று வட்டார பகுதிகளில் இரவு முழுக்க வெளுத்து வாங்கிய மழை..



புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோபாலப்பட்டிணம், மீமிசல், ஆவுடையார்கோவில், மணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதேபோல நேற்று கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்தது.

இந்த மழையால் சாலையில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. கோபாலப்பட்டிணத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக உள்ளதால், இந்த சாலையில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

மழையளவு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக மீமிசலில் 48.20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் ஆதனக்கோட்டை 1, பெருங்களூர் 3.60, புதுக்கோட்டை 5, ஆலங்குடி 14, கந்தர்வகோட்டை 25, கறம்பக்குடி 4.10, மழையூர் 5.20, திருமயம் 10.80, அரிமளம் 11.20, அறந்தாங்கி 2.20, ஆயிங்குடி 7.60, நாகுடி 6.20, மீமிசல் 48.20, ஆவுடையார்கோவில் 11.60, மணமேல்குடி 12, இலுப்பூர் 20, குடுமியான்மலை 5, அன்னவாசல் 6, விராலிமலை 5.40, உடையாளிப்பட்டி 22, கீரனூர் 24 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதிகபட்சமாக மீமிசலில் 48.20 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக ஆதனக்கோட்டையில் 1 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments