மீமிசலில் இருசக்கர வாகனம் மீது பிக்கப் வேன் மோதி விபத்து..காவல் உதவி ஆய்வாளர் பலி..



மீமிசல் கடைத்தெருவில் இருசக்கர வாகனம் மீது பிக்கப் வேன் மோதிய விபத்தில் மீமிசல் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் காவல் நிலையத்தில் சுப்பிரமணி அவர்கள் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், இன்று 29.10.2019 செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு சைக்கிள் கடை அருகாமையில் கடைத்தெருவை நோக்கி
தனது இருசக்கர வாகனத்தில் சுப்பிரமணி அவர்கள் சென்று கொண்டிருக்கையில் அப்போது, ஜெகதாப்பட்டிணத்தில் இருந்து கருவாடு ஏற்றிக்கொண்டு அதி வேகமாக வந்த பிக்கப் வேன் இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் மோதி சில அடி தூரம் இழுத்து செல்லப்பட்டார்.


இந்த விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து மீமிசல் போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments