கோவையில் ''பப்ஜி'' கேம் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் மரணம்.!



கோவை அருகே தனிமையில் பப்ஜி கேமை விளையாடி கொண்டிருந்த 21 வயது வாலிபர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொபைல் கேம் உலகில் முதன்மையாக இருக்கும் ''பப்ஜி'' ஐ பலகோடி பேர் விளையாடி வருகின்றனர். இந்த கேமில் தரப்படும் அப்டேட்டுகள் பயனர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதில் குறிப்பாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களே அதிகம்.

கோவை சுங்கம் சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது (21). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று மாணவனின் பெற்றோர் வெளியில் சென்றுள்ளனர். தனிமையில் இருந்த ஷாகுல் ஹமீது வீட்டில் உள்ள தனியறையில் கதவை பூட்டிக்கொண்டு செல்போனில் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவரது பெற்றோர், மகன் சாப்பிட்டானா என்பதை கேட்க செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அந்த அழைப்பை அவர் எடுக்காமல் இருந்துள்ளார். எனினும் மீண்டும் மீண்டும் முயற்சித்தும் போன் எடுக்கப்படாமலேயே இருந்துள்ளது.

மகன் தூங்கியிருக்கலாம் என்று நினைத்து கொண்ட பெற்றோர் இது குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் மதியம் 3 மணி அளவில் வீடு திரும்பிய அவர்கள் மகன் இருந்த அறையின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவும் திறக்கப்படாமலே இருந்துள்ளது. உள் இருந்தும் எந்த சத்தமும் வரவில்லை.

அதிர்ச்சியடைந்த அவர்கள் கதவை உடைத்து பார்த்த பொழுது, மகன் பப்ஜி கேம் விளையாடி கொண்டிருந்த நிலையில், அப்படியே நாக்கை கடித்தவாறு கை கால் இழுத்துக்கொண்டு சுயநினைவு இல்லாமல் கிடப்பதை கண்ட பெற்றோர்கள் உடனடியாக அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் பல முயற்சிகள் செய்தும் பலனளிக்காமல், அன்று இரவு 8 மணி அளவில் சாகுல் அமீது மாணவன் இறந்துள்ளார். பிறகு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய நிலையில் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments