580 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை.. 5 மாதம் கழித்து 2.1 கிலோ எடை.. நாகப்பட்டினம் அரசு மருத்துவர்கள் சாதனை



நாகப்பட்டினத்தில் வெறும் 500 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையை 5 மாதங்களாக இன்குபேட்டரில் வளர்த்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்
.நாகை மாவட்டம் சாமந்தப்பேட்டையை சேர்ந்த செல்வமணி- லதா தம்பதிக்கு கடந்த மே மாதம் 10-ஆம் தேதி நாகை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை முழு வளர்ச்சி காலத்தை அடைந்தவுடன் பிறந்த போதிலும் இந்த குழந்தையின் எடை வெறும் 580 கிராம் இருந்தது.

எலும்பும் தோலுமாக இருந்த குழந்தையின் உயிரை எப்படி காப்பாற்றுவது என அதன் பெற்றோர் கவலை கொண்டனர். இதையடுத்து அக்குழந்தை அந்த மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்டது.

2.1 கிலோ எடை

அக்குழந்தையை இன்குபேட்டரில் வைத்த மருத்துவர்கள் செயற்கை சுவாச கருவியை 24 மணி நேரமும் வைத்திருந்தனர். கிட்டதட்ட 5 மாதங்களாக இன்குபேட்டரில் வைக்கப்பட்ட குழந்தை தற்போது 2.1 கிலோ எடையை எட்டியுள்ளது.

மருத்துவர்கள்

குழந்தையின் ஆரோக்கியம் நன்றாக உள்ளது. தானாகவே சுவாசிக்கிறது. இதையடுத்து குழந்தையை அதன் பெற்றோரிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர்.

மருத்துவர்கள் வெற்றி

5 மாதமாக போராடி குழந்தையின் உயிரை மீட்டெடுத்த மருத்துவர்களின் முயற்சி சாதனையாகவே பார்க்கப்படுகிறது. மருத்துவர்களுக்கு குழந்தையின் பெற்றோர் மட்டுமின்றி அங்கிருந்த நோயாளிகள், பொதுமக்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

ஜான்சிராணி

கிட்டதட்ட 147 நாட்கள் இன்குபேட்டரில் வைக்கப்பட்ட குழந்தைக்கு ஜான்சிராணி என பெயரிடப்பட்டது. நாட்டிலேயே குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகள் பட்டியலில் ஜான்சிராணி 3 ஆவது இடத்தை பிடித்துள்ளார். முதல் இரு இடங்களில் 380 கிராம் மற்றும் 580 கிராம் எடையுடன் பிறந்த குழந்தைகள் இடம்பெற்றுள்ளன.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments