சவுதிக்கு பணிபுரிய சென்ற தமிழக இளைஞர்கள் வேதனை!சவுதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்ற தமிழக இளைஞர்கள் சிலர்  பணிபுரியும் நிறுவனத்தில் தங்களுக்கு ஊதியம் வழங்காமல் ஏமாற்றுவதாகவும், தாயகம் திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.
 திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, தலைவன்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த எட்டு பேர், கடந்த மே மாதம் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் மூலம் சவுதியில் உள்ள GULF LINCO என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளனர்.

அந்த நிறுவனத்தின் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட எட்டு பேருக்கும், கடந்த மூன்று மாதங்களாக சரியாக ஊதியம் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

மேலும் சவுதியில் உள்ள INDIA FRATERNITY FORUM என்ற அமைப்பின் நிர்வாகிகள், அந்த எட்டு பேரையும் சந்தித்ததோடு அவர்களின் புகார்களை இந்திய தூதரகத்தில் கொடுத்துள்ளனர்.

ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தாயகம் திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சவுதி அரேபியாவில் கஷ்டப்படும் எட்டு பேரும் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments