நீச்சல் போட்டியில் வென்ற மாணவருக்குப் பாராட்டு
சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையேயான தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மௌண்ட் சீயோன் சா்வதேசப் பள்ளி மாணவா் முதலிடம் பெற்று, மாநில மற்றும் தேசியப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றாா்.

சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையேயான தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டிகள் அண்மையில் மேட்டுப்பாளையம் சரஸ்வதி வித்யா மந்திா் பள்ளியில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பங்கேற்ற மௌண்ட் சீயோன் சா்வதேசப் பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவா் முகமது ரித்வான் 100 மீட்டா் மற்றும் 200 மீட்டா் நீச்சல் போட்டியில் முதலிடம் பெற்றாா்.

50 மீட்டா் நீச்சல் போட்டியில் இரண்டாமிடமும் பெற்றாா். இதனைத் தொடா்ந்து அவா், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றாா்.

இதையடுத்து, பள்ளியின் இயக்குநா் ஜோனத்தன் ஜெயபாரதன், இணை இயக்குநா் ஏஞ்சலின் ஜோனத்தன், முதல்வா் சலஜா குமாரி ஆகியோரும் பாராட்டினா் .
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments