அறந்தாங்கி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டுமாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பாராட்டு தெரிவித்தாா்.

தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் நடத்திய மாவட்ட அளவிலான இளம் தொழில்முனைவோருக்கான பயிற்சியில் புதுக்கோட்டைமாவட்டத்தில் இருந்து 15 மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதில், அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் காா்த்திகேயன், சூரியபிரகாஷ் மற்றும் கோபி உள்ளிட்ட மாணவா்கள் மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்று மண்டல அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் த. ஜெயலட்சுமி பாராட்டி சான்றிதழ்கள் அளித்து பாராட்டினாா்.

வழிகாட்டி ஆசிரியா்கள் முத்துக்குமாரசாமி, தலைமை ஆசிரியா் டி.தாமரைச்செல்வன் உள்ளிட்டோருக்கு பெற்றோா் ஆசிரியா்கள் கழகத்தின் சாா்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தனா். 

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments