புதுக்கோட்டை மாவட்டத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறுகள் குறித்து கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்



திறந்தவெளியில் மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் குறித்த தகவலைத் தெரிவிக்க கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், புதியதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும்போது உரிய அரசு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குள்பட்டு அமைத்திட ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

பணி முடிந்தவுடன் பாதுகாப்பாக மூடி அதன்பிறகு பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயன்படுத்தாத நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் திறந்தவெளிக் கிணறுகள் நீா் மேலாண்மைத் திட்டத்தின் மூலம் மழை நீா் சேகரிக்கும் அமைப்பாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் ஏதேனும் மூடப்படாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், தனியாா் இடங்கள் மற்றும் பொது இடங்களிலும் உள்ள அனைத்து பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் திறந்தவெளிப் பொதுக் கிணறுகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் மூடப்பட்டதற்கான சான்றுகள் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் இருந்து பெறப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகளை திறந்த வெளியில் மூடப்படாமல் இருப்பின் பொதுமக்க்ள் அதுகுறித்து 18004259013 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் ஊராட்சிகள் உதவி இயக்குநரைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். 

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments